இன்றைய ராசி பலன்கள்(01-04-24)…

by Editor News

மேஷம்:

இன்றைய நாள் உங்களுக்கு கடின உழைப்பு நிறைந்த நாளாக இருக்கும். வணிகர்கள் தங்களின் வியாபாரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் நாள் முழுவதும் பிஸியாக இருப்பார்கள். உங்கள் இனிமையான பேச்சின் மூலம் புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். மாணவர்கள் வெற்றி பெறுவதில் இருந்த தடைகள் அனைத்தும் இன்று நீங்கும். குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவது உங்களுக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கும்.

ரிஷபம்:

இன்று குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பாக உங்கள் வாழ்க்கை துணையுடன் ஆலோசித்து சில திட்டங்களை தீட்டுவீர்கள். உங்கள் பணத்தை புதிய சொத்துக்களில் இன்று முதலீடு செய்யலாம், எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். வியாபாரிகள் இன்று தங்களின் பணப் பரிவர்த்தனையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் யாராவது ஏமாற்ற முயற்சி செய்யலாம். அரசியலில் உள்ளவர்களுக்கு இன்று நல்ல வாய்ப்பு கிடைக்கும்.

மிதுனம்:

இன்று நீங்கள் உங்களின் தனிப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதில் பிஸியாக இருப்பீர்கள். சேவை அல்லது தொண்டு பணிகளில் பணம் செலவழிப்பீர்கள், இது உங்களுக்கு மன அமைதியைத் தரும். உங்கள் தந்தைக்கு கண் சம்பந்தமான சில பிரச்சனைகள் இன்று ஏற்படலாம், எனவே நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.இன்று நீங்கள் சந்திக்கும் ஒரு புதிய நபர் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம்.

கடகம்:

உங்கள் உறவினர்களில் ஒருவரால் நீங்கள் ஏமாற்றப்படலாம் என்பதால், இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். பணம் சார்ந்த பிரச்சனைகளை இன்று நீங்கள் சந்திக்க நேரிடலாம். உங்கள் மனதில் நேர்மறையான எண்ணங்களை மட்டுமே இன்று வைத்திருக்க வேண்டும். வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்று சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றிய பேச்சுக்கள் தொடங்கும்.

சிம்மம்:

இன்றைய நாள் உங்களுக்கு ஒரு இயல்பான நாளாக இருக்கும். கடந்த கால சம்பவங்களை நினைத்து கொண்டிருந்தால் உங்களின் இன்றைய வேலைகள் கெடும், இதனால் நீங்கள் விரும்பிய லாபத்தைப் பெற முடியாது. உங்கள் அன்றாட செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பொருளாதார நிலை இருக்கும். மாலையில் நீங்கள் சில ஆன்மீக நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம், அங்கு நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபர்களை சந்திப்பீர்கள். கடினமாக உழைத்தால் மட்டுமே இன்று வெற்றி பெற முடியும்.

கன்னி:

இன்று நீங்கள் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டிய நாள். ஷேர் மார்க்கெட் அல்லது நிலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு இன்றைய நாள் சிறப்பானதாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவரின் கோபத்தால் நீங்கள் சற்று வருத்தம் அடைவீர்கள். ஆனால் நாளின் முடிவிற்குள் உங்களின் எண்ணங்களை அவர் புரிந்துகொண்டு சமாதானம் ஆவார்.

துலாம்:

சொந்த தொழில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று சிறப்பான நாளாக இருக்கும். ஊழியர்கள் இன்று வேலையில் சில பிரச்சனைகளை எதிர்கொண்டாலும் உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கலாம். உங்கள் துணையின் சில பிரச்சனைகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், அப்போதுதான் அவற்றிற்கு தீர்வு காண்பது எளிதாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல், வாங்கலில் இன்று கவனமுடன் இல்லாவிட்டால் உங்களின் நெருங்கிய உறவில் விரிசலை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்கள் சகோதரர்களுடன் நீங்கள் முன்னெடுக்கும் சில திட்டங்கள் உங்களின் குடும்ப எதிர்காலத்தை மேம்படுத்தும். இன்று செலவுகளை நீங்கள் கட்டுப்படுத்தாவிட்டால்,விரைவில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால், அவற்றை பேசி விரைந்து தீர்த்துக் கொள்வது நல்லது.

தனுசு:

இன்று நீதிமன்றத்தில் ஏதேனும் வழக்கு நடந்து கொண்டிருந்தால், அதில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரலாம். இதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பெற்றோருக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்னுரிமை கொடுக்காவிட்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் எழலாம். அரசியலில் இருப்பவர்கள் இன்று சற்று எச்சரிக்கையாக செயல்படாவிட்டால் சீனியர்களுடன் சில கருத்து வேறுபாடுகளை சந்திக்க நேரிடும். இன்று கடன் கொடுத்தால், அந்த பணம் திரும்ப வருவவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு.

மகரம்:

இன்று வியாபாரிகள் தங்கள் விருப்பப்படி லாபத்தைப் பெறுவார்கள், இதன் காரணமாக எல்லையற்ற மகிழ்ச்சி ஏற்படும். புதிய ஆடைகள், மொபைல்கள், மடிக்கணினிகள் போன்றவை வாங்க இன்று பணம் செலவு செய்வீர்கள். முக்கிய விஷயங்களில் இன்று நீங்கள் தனியாக எந்த முடிவையும் எடுக்க வேண்டாம், உங்கள் வாழ்க்கை துணையுடன் கலந்தாலோசிப்பது நல்லது. மாலை நேரத்தில் பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்:

அலுவலக்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, சக ஊழியருடன் மோத நேரிடலாம். இறுதியில் வாக்குவாதம் ஏற்பட்டு உயரதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடலாம். எனவே இன்று முழுவதும் அமைதி காப்பது நல்லது. நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முயற்சி செய்வீர்கள். குடுமபத்தில் ஏதேனும் தகராறு இருந்தால், அதை தீர்க்க உங்கள் சகோதரர்கள் உதவுவார்கள். ஒருத்திய நபர்களை நம்புவதற்கு முன்பு நீங்கள் ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்

மீனம்:

நீங்கள் நீண்ட நாட்களாக வாங்க முயற்சி செய்து வரும் சொத்துக்களை இன்று வாங்க வாய்ப்பு கிடைக்கும். உங்களின் ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இன்று இருக்கும். வணிகர்கள் இன்று சில தவறான நபர்களால் வழிநடப்படலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம். வாழ்க்கைத் துணையுடன் நேரம் செலவிடுவது உறவை மேலும் வலுவாக்க உதவும். மாணவர்கள் கல்வியில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு பெற்றோரின் உதவியை நாட வேண்டியிருக்கும்.

Related Posts

Leave a Comment