பலர் தாங்கள் உண்ணும் உணவு மற்றும் பருகும் பானங்களில் கவனக்குறைவாக இருக்கிறார்கள். இதன் காரணமாக உடல் பலவீனமடைவதோடு அவர்களின் ஆரோக்கியமும், ஆளுமையும் சீர்குலைக்கத் தொடங்குகிறது. உங்கள் வற்றிய உடலுக்கு புதிய உயிர் கொடுக்க விரும்பினால், இன்றே சில உணவுகளை உட்கொள்ளத் தொடங்குங்கள். கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய இந்த உணவுகள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
உடல் தசைகளின் வளர்ச்சிக்கு புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். இது உங்கள் உடல் எடையை அதிகரித்து ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஹெல்த்லைன் அறிக்கையின்படி, பால், தயிர், சீஸ், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்கள் எடையை அதிகரிக்க சிறந்ததாகக் கருதப்படுகிறது. இவற்றில் அதிகளவு கால்சியம் மற்றும் புரதம் உள்ளதால் நம் எலும்புகளை பலப்படுத்துகிறது.
மெல்லிய மற்றும் பலவீனமான உடல்வாகை கொண்டவர்கள் உலர் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். உலர் பழங்கள் ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாக கருதப்படுகிறது. முந்திரி, பாதாம், திராட்சை, பேரிச்சம்பழம் மற்றும் பிற உலர் பழங்கள் எடை அதிகரிப்பதற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. உலர் பழங்களில் கலோரிகள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இந்த பொருட்களை நாம் ஸ்னாக்ஸாக கூட உட்கொள்ளலாம்.
உடல் எடையை அதிகரிக்க நட்ஸ் வெண்ணெய் சாப்பிடலாம். நட்ஸ் வெண்ணெயில் அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்துள்ளது. இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள கலோரிகள் அதிகரித்து எடை வேகமாக கூடும். இது தவிர, ஆளி விதைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகள் போன்ற விதைகளை உட்கொள்வதும் உடலை பலப்படுத்துவதோடு ஏராளமான ஆற்றலை அளிக்கிறது.
உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றால் பழங்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும். வாழைப்பழம், சப்போட்டா, பப்பாளி, சீத்தாப்பழம், கொய்யா மற்றும் அத்திப்பழம் ஆகியவற்றை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும். இந்த பழங்களில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தேவைப்பட்டால் வாழைப்பழ மில்க் ஷேக் குடிக்கலாம். இதன் மூலம் ஒரு சில வாரங்களிலேயே உங்கள் உடல் ஆரோக்கியம் பெறத் தொடங்கும்.
பழங்கள் மட்டுமின்றி காய்கறிகளை உட்கொள்வதன் மூலமும் உடல் எடையை வேகமாக அதிகரிக்கலாம். உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சோளம், கொண்டைக்கடலை மற்றும் பீன்ஸ் ஆகியவற்றை உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு பலவீனமும் நீங்கும். இதில் விசேஷம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு காய்கறிகளை உட்கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உடலுக்கு நன்மை பயக்கும்.
இவ்வளவு சாப்பிட்டும் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் இருந்தால், மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ளலாம். இது தவிர, உடற்பயிற்சி பயிற்சியாளரை சந்தித்து வே புரத பவுடரை (WHEY PROTEIN) உட்கொள்ள ஆரம்பிக்கலாம். வே புரதம் பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் மிகவும் ஆரோக்கியமான புரதமாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால் தசைகளின் வளர்ச்சி துரிதமாகி உடலுக்கு பலம் கிடைக்கும்.