வேல்ஸ் இளவரசி கேட்க்கு புற்றுநோய் : மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?

by Editor News

புற்றுநோய் பாதிப்பு குறித்து அறிவித்த கேட் மிடில்டன், கீமோ சிகிச்சை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ள, மருத்து நிபுணர்கள் அதன் நிலைகள் குறித்து வெளிப்படுத்தியுள்ளனர்.

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தனக்கு புற்றுநோய் இருப்பதையும், தற்போது தான் சிகிச்சையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனின் சிகிச்சை நிலைமைகள் குறித்தும், கீமோ சிகிச்சையின் தாக்கம், அது எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பிலும் மருத்துவ நிபுணர் Jane Kirby விளக்கமளித்துள்ளார்.

அதாவது, கீமோதெரபி, தற்போதுள்ள புற்றுநோய் செல்களை அழிப்பது மட்டுமன்றி, மீண்டும் நோய் வருவதை தடுக்கவும் உதவுகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும், கீமோதெரபி சிகிச்சையில் பலவகை உள்ளது. அறுவை சிகிச்சைக்கு முன்னரோ அல்லது பின்னரோ கீமோ சிகிச்சை முன்னெடுக்கலாம் எனவும் மருத்துவ நிபுணர் தெரிவித்தார்.

புற்றுநோய் செல்களை மொத்தமாக அகற்றியதாக மருத்துவர்கள் நம்பும் நிலையிலும் கீமோ பரிந்துறைக்கப்படலாம். அது மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவும்.

புற்றுநோயின் தன்மையை கருத்திற்கொண்டே, சிகிச்சை எவ்வளவு காலம் என்பது முடிவு செய்யப்படும் என மருத்துவ நிபுணர் Jane Kirby தெரிவித்தார்.

கீமோதெரபி குறித்து மேலும் கருத்து தெரிவித்த மருத்துவ நிபுணர்,

கீமோ சிகிச்சையால் கண்டிப்பாக பக்கவிளைவுகள் ஏற்படும். காரணம் பாதிக்கப்பட்ட செல்களுடன் ஆரோக்கியமான செல்களும் சேதமடைகிறது. பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் 375,000 க்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.

167,000 க்கும் அதிகமானோர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்கின்றனர்.

மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதி பேர் நோயறிதலுக்குப் பிறகு, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு அதிகமாகவும் உயிர் வாழ்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, வேல்ஸ் இளவரி கேட் மிடில்டன் தமக்கு எந்தவகையான புற்றுநோய் என்பதை குறிப்பிடாமல், தாம் கீமோ எடுத்துக்கொள்ள இருப்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளதால், அவர் கொஞ்சம் சிக்கலான நிலையில் இருப்பதாகவே மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment