மகளிர் உரிமைத்தொகை 3000.. விவசாயிகளுக்கு 5000.. 133 அறிவிப்புகளோடு அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஈபிஎஸ்..

by Editor News

மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 7 கட்டமாக நடக்கும் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு பொறுத்தவரையில் ஒரே கட்டமாக வருகின்ற ஏப்ரில் 19 தேதி நடக்கவிருக்கிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 21 தொடங்கி வருகின்ற மார்ச் 27 வரை நடக்கிறது.

கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை முடித்த அதிமுக, இந்த தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணியமைத்துள்ளது. தேமுதிகாவிற்கு 5 மக்களவை தொகுதிகளை ஒதுக்கிய அதிமுக ராஜ்ய சபாவில் 1 இடத்தையும் ஒதுக்கியுள்ளது.

இந்நிலையில், பல அம்சங்களை கொண்ட தேர்தல் அறிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு இருக்கிறார். சுமார் 133 அறிவிப்புகளோடு இருக்கும் இந்த தேர்தல் அறிக்கையை சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுகவின் கட்சித் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியிட்டார் ஈபிஎஸ்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் இருக்கும் முக்கிய அறிவிப்புகள்..

ஆளுநர் பதவி தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு கருத்து கேட்டல்,
உச்சநீதிமன்றத்தின் கிளை சென்னையில் அமைத்தல்,
நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச்சாவடிகள் அகற்றுதல்,
மகளிர் உரிமைத் தொகையை 3000 ரூபாயாக உயர்த்துதல்,
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தை சென்னையில் நடத்துதல்,
வழக்காடு மொழியாக தமிழ் மொழியை அறிவித்தல்,
மேகதாது ஆணை கட்டுதல்,
நூறுநாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக மாற்றி ஊதிய உயர்வாக 450 ரூபாய் கோரல்,
முல்லை பெரியாறு ஆணை தீர்மானம்,
பாலாறு தடுப்பணை எதிர்ப்பு,
மருத்துவ நுழைவுத் தேர்வான NEET தேர்வுக்கு மாறான தேர்வு,
மழை நீர் சேகரிப்பு திட்டம்,
தமிழக மீனவர் பாதுகாப்பு,
இரு சக்கர வாகனங்களுக்கென தனி பாதை அமைத்தல்,
விவசாயிகளின் நலம் காத்தல்,
விவசாயிகளுக்கு 5000 ரூபாய் வழங்குதல்,
மதுரை AIMS மருத்துவமனையின் கட்டுமான பணிகளை விரைவுப்படுத்துதல்,
வெவ்வேறு நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்குதல் மற்றும் அதற்கான நிதி வழங்குதல்,
இலவச வீட்டு மனை பட்டா

என சுமார் 133 வலியுறுத்துதல் கொண்ட அதிமுகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார் அக்கட்சி பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி.

Related Posts

Leave a Comment