டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டதையடுத்து, ஆம் ஆத்மி கட்சி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மதுபான கொள்கை விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவினால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்
கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்தப்பட்ட நிலையிலேயே அவர் கைது செய்துள்ளப்பட்டுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இந்தியாவின் நிதிக் குற்றவியல் பிரிவு பல முறை அழைப்பு விடுத்தது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
மக்களவைத் தேர்தல் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், டெல்லி முதல்வர் மீதான கைது நடவடிக்கை கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனத்தை எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கெஜ்ரிவாலின் குடும்பத்தினரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டபோதிலும் முதலமைச்சராக தொடர்வார் என சபாநாயகர் தெரிவித்துள்ளா்.
இந்நிலையில், கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கையை தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.