ஒவ்வொரு வார இறுதியிலும் ஒடிடியில் புது புது படங்கள் வெளியாகும். கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகே ஓடிடியின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அமேசான், நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார் என அனைத்து ஓடிடி தளங்களிலும் இந்த வாரம் வெளியாகவுள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.
ஓப்பன் ஹெய்மர்:
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ஓப்பன்ஹெய்மர், சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு ஆகிய பிரிவுகளில் 7 ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளது. இந்த படம் அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானியின் கதையைச் சொல்கிறது. இது தைரியமான கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான படைப்பு என விமர்சிக்கப்படுகிறது. இந்த படம் வரும் 21ஆ தேதி ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.
ஃபைட்டர்:
கிருத்திக் ரோஷன், தீபிகா படுகோனே நடித்து பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்ற ஃபைட்டர் திரைப்படம், வரும் 21ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது.
லால் சலாம்:
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு அதிக வரவேற்பு கிடைக்கும் என நம்பப்பட்டது. இந்த படம் வரும் 22ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.
சுந்தரம் மாஸ்டர்:
பேராசை மற்றும் சுயநலத்தை அகற்றினால் வாழ்க்கை எளிமையாக இருக்கும் என்பதை இயக்குனர் கல்யாண் சந்தோஷ் இந்த படத்தில் காட்ட முயற்சிக்கிறார். இந்த படத்தின் ட்ரைலர் பெரிதளவு வரவேற்பை பெறாத நிலையில், இந்த படம் வரும் 22ஆம் தேதி ஈ டிவியில் வெளியாகிறது.