இறால் கிரேவி…

by Editor News

செய்முறை :

முதலில் இறால்களில் உள்ள தோளினை நீக்கி அதில் கடல்பாசி, ஜாதிக்காய், மிளகாய்தூள், மஞ்சள்தூள், மிளகு தூள் போன்றவற்றுடன் பட்டை, கிராம்பு, ஆகிய இயற்கை பொருட்களுடன் சேர்த்து மசாலாவை தயார் செய்து வைக்கின்றனர். பொதுவாக உணவுகளில் கடல்பாசி மற்றும் ஜாதிக்காய் சேர்ப்பதால் அதீத மணமிக்கதாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும்.

இந்த மசாலாவை இறால் முழுவதும் தடவி, நன்றாக அரைமணி நேரத்தில் இருந்து ஒரு‌மணி நேரம் வரையில் ஊறவைத்து பின்பு பெரிய அளவிலான மீன் பொறிக்கும் கல்லில் வைத்து கிரேவி செய்ய‌ தொடங்குகின்றனர்.

கல்லில் போட்ட பிறகு மீண்டும்‌ மசாலா தூள் போடப்படுகிறது. கருவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயம் போன்றவற்றுடன் நன்றாக வேக வைத்து சிறிதாக தக்காளி ஜாசும் சேர்த்து அரைமணி‌ நேரம் வரையில் நன்றாக பெரட்டி எடுத்தால் சுவையான இறால் கிரேவி தயார் ஆகிவிடும். இதனை மீன் குழம்பு, ரசம் போன்றவற்றுடன் சாப்பிடும்போது அலாதியான சுவையை தரும்.

Related Posts

Leave a Comment