நாம் ஆரோக்கியமாக இருக்க உணவு மட்டுமின்றி, பழங்களும் அவசியம். அவற்றில் ஒன்றுதான் செவ்வாழை. இது மனிதனுக்கு கிடைத்த ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். ஆம்… எப்படியெனில், இதில் ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, அதிக ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தோல் பிரச்சனையால் அவதிப்பட்டவர்களுக்கும் இந்த பழம் அற்புதமான பலனைத் தருமாம். மேலும், இப்பழம் நுரையீரல், கல்லீரல், இதயம், குடல் போன்ற உடலுறுப்புகளின் இயக்கத்துக்கு பெரிதும் உதவும்.
கண் ஆரோக்கியம்:
அதுபோல், தினமும் 100 கிராம் செவ்வாழை பழம் சாப்பிட்டால் கண் பிரச்சனைகள் வரவே வராது. மாலைக்கண் பிரச்சினை உள்ளவர்களும் இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் கண்பார்வை கூர்மை ஆகும். உங்களுக்கு தெரியுமா… செவ்வாழையில் நியூட்டின், ஸியான்தினின், பீட்டா கரோட்டின், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. இவை எந்த விதமான கண் பிரச்சனைக்கு சிறந்த தீர்வளிக்கும். எனவே, தினமும் செவ்வாழை பழம் சாப்பிடுங்கள். குறிப்பாக தினமும் 2 செவ்வாழைப் பழம் சாப்பிட்டு வந்தால் கண்கள் சிவந்து இருப்பது குறையும்.
பல் ஆரோக்கியம்:
செவ்வாழை பழம் கண்ணுக்கு மட்டுமல்ல, பல்லுக்கும் ரொம்பவே நல்லது தெரியுமா.. பல் ஆடுவது, ஈறுகள் பலவீனமாக இருப்பது என இது போன்ற பல பிரச்சினைகளை சரிசெய்ய இந்த பழம் பெரிதும் உதவுகிறது. மேலும், 21 நாட்கள் தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்கள் வலுவடையும் மற்றும் ஈறுகளும் உறுதியடையுமாம். வாழைப்பழங்களிலேயே, செவ்வாழை மட்டும்தான் பற்களுக்கு வலிமை தரும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
அதுபோல் செவ்வாழையை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்புத்தளர்ச்சி நீங்கி நரம்புகள் பலப்படும். அதுமட்டுமின்றி, ஆண்மை பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த பழம் ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம்.