நீங்க சர்க்கரையை தவிர்த்தால் என்னென்ன மாற்றங்கள் வரும்..?

by Editor News

இன்று நம்முடைய அன்றாட உணவு முறையில் சர்க்கரை உள்ளார்ந்த பகுதியாக மாறிவிட்டது. டீ முதல் டெசர்ட் வரை சர்க்கரை சேர்த்த உணவுகள் அனைத்துமே சுவையாக இருக்கின்றன. ஆனால் சர்க்கரை சேர்ப்பதால் நமக்கு பல உடல்நலக் கோளாறுகள் வரக்கூடும் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? நம்முடைய பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு இந்த செயற்கை சர்க்கரை தான் காரணமாக இருப்பதாக மருத்துவர்களும் நிபுணர்களும் கூறுகிறார்கள். சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் ஆரோக்கியமாக வாழலாம் என்பது அவர்களது கருத்தாக இருக்கிறது.

சர்க்கரை பண்டங்கள் மீதான ஆசையை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என்றும் இதற்கு சில வழிகளை பின்பறினால் போதும் எனக் கூறுகிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். இதற்கு அவர் மூன்றடுக்கு வழிமுறைகளை கூறுகிறார். முதலாவது ஒரு க்ளாஸ் தண்ணீர். இரண்டாவது பழங்கள் சாப்பிடுவது. மூன்றாவது உங்கள் தட்டிலுள்ள டெசர்ட் சாப்பிடுவதற்கு முன்பு இரண்டு நிமிடங்கள் காத்திருந்தாலே சர்க்கரை மீதான ஆசை குறைந்துவிடும். சரி, சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் என்ன பலன் கிடைக்கும்?

ஒட்டுமொத்த உடல்நலன் மேம்படும்: டயட்டில் சர்க்கரையை குறைப்பதன் மூலம் ஊட்டச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் புரொட்டீன் ஆகியவற்றை அதிகமாக சாப்பிடுகிறோம். இது நமது ஆரோக்கியத்தையும் உடல்நலத்தையும் மேம்படுத்துகிறது.

உடல் எடை குறைப்பு:

சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளும், பானங்களும் அதிக கலோரிகளை கொண்டிருப்பதோடு குறைவான ஊட்ச்சத்துகளை கொண்டிருக்கும். சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் நீங்கள் எடுத்துக்கொள்ளும் கலோரியின் அளவும் குறைவதால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.

இதய நலன் மேம்படுகிறது:

அதிக சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் இதய நோய் வரும் ஆபத்து மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தம், வீக்கம், உடலில் ட்ரைக்ளைசைரைடு ஆகியவையும் அதிகரிக்கிறது.

பல் சுகாதாரம்:

நம்முடைய பற்கள் சொத்தை ஆவதற்கு முக்கிய காரணம் இந்த சர்க்கரை தான். உணவில் சர்க்கரையை குறைப்பதன் மூலம் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாய்வழியாக வரும் சுகாதார பிரச்சனைகளை குறைக்க முடியும்.

நிலையான ஆற்றல்:

சர்க்கரை உண்பதால் நம் உடலுக்கு உடனடியான ஆற்றல் கிடைத்தாலும், சீக்கிரமாகவே இது குறைந்துவிடும். சர்க்கரையை சேர்க்காமல் இருந்தாலே நாள் முழுவதும் நம்முடைய உடலின் ஆற்றலை குறையவிடாமல் பார்த்துக்கொள்ள முடிவதோடு உற்பத்தி திறனையும் அதிகப்படுத்தலாம்.

டயாபடீஸ் ஆபத்து குறைகிறது:

அதிகப்படியான சர்க்கரையை உணவில் சேர்ப்பதால் டைப்-2 டயாபடீஸ் வரும் ஆபத்து அதிகமுள்ளது. சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வதன் மூலம் நீரிழிவு நோய் வரும் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

மனநிலையை தெளிவுபடுத்தும்:

சர்க்கரை சாப்பிடுவதற்கும் அடிக்கடி நமது மனநிலை மாறுவதற்கும், எரிச்சல் ஏற்படுவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் தெளிவான சிந்தனையும் தடுமாற்றம் இல்லாத மனநிலையும் பெறலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பிராகாசமான சருமம்:

உங்கள் தினசரி டயட்டிலிருந்து சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் வீக்கத்தை குறைத்து ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். மேலும் முகப்பருக்கள் நீங்கி சருமம் பிராகாசம் அடைகிறது.

செரிமான ஆரோக்கியம்:

சர்க்கரை கலந்த உணவுகளும், பானங்களும் நமது செரிமான ஆரோக்கியத்தை பாதித்து வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை கொண்டு வருகிறது. தினசரி டயட்டிலிருந்து சர்க்கரையை தவிர்ப்பதன் மூலம் செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment