எலுமிச்சை பழத்தில் உள்ள நன்மைகள்..

by Editor News

ஆரோக்கியம் தரும் எலுமிச்சை பழம் :

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை அதன் சுவைக்காகவும் அற்புதமான மருத்துவ குணங்களுக்காகவும் தனித்து விளங்குகிறது. வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட் மற்றும் தாத்துக்கள் எலுமிச்சை பழத்தில் அதிகளவு உள்ளது. இவை நம் உடலுக்கு ஆற்றலையும் ஊட்டச்சத்தையும் எப்படி தருகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது :

புளிப்பு சுவை நிறைந்த எலுமிச்சை பழம், நம் இதயத்தின் ஆரோக்கிய அரணாக செயல்படுகிறது. நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் எலுமிச்சை முக்கிய பங்காற்றுகிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் இதயம் சம்மந்தமாக எல்லா பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.

உடல் எடை பராமரிப்பு :

உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? அப்படியென்றால் அதற்கு சிறந்த ஆயுதமாக எலுமிச்சை விளங்குகிறது. இதன் மெடபாலிஸத்தை மேம்படுத்தும் பண்புகள் காரணமாக உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் உணவில் எலுமிச்சையை சேர்க்கும் போது வயிறு நிறைந்த திருப்தி கிடைக்கிறது. இதனால் அதிகமான உணவுகள் சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை ஏறாமல் பார்த்துக்கொள்ள முடிகிறது.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கிறது :

தினமும் லெமன் ஜூஸ் குடித்தால் சிறுநீரக கற்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. லெமன் சாப்பிடுவதால் நம் சிறுநீர் அளவு மற்றும் pH அதிகமாகி, கற்கள் உருவாகும் வாய்ப்பு குறைகிறது. லெமன் ஜூஸ் வெறும் சுவை மிகுந்த பானம் மட்டுமல்ல, உங்கள் சிறுநீரகத்தை பாதுகாக்கும் ஆயுதம் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இரும்புச்சத்து உறிஞ்சப்படுவதை அதிகப்படுத்துகிறது :

ரத்தசோகை பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சை நம்பிக்கை ஒளியை தருகிறது. லெமனில் உள்ள சிட்ரிக் ஆசிட், தாவர ஆதாரங்களில் உள்ள இரும்புச்சத்து கிடைப்பதற்கு உதவுகிறது. இது ரத்த சம்மந்தமான பொதுவான கோளாறுகளை குணப்படுத்த உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்குகிறது :

செரிமானத்திற்கு சூப்பர் ஹிரோவாக செயல்படும் எலுமிச்சை, நமது உமிழ்நீரையும் இரைப்பை சாற்றையும் அதிகப்படுத்தி செரிமானத்தை ஒழுங்குப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீர்கிறது. உங்கள் செரிமானம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் எலுமிச்சையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related Posts

Leave a Comment