தக்காளி ஃபேஸ் மாஸ்க் :
1. தக்காளியை எடுத்து அதில் ஓட்ஸ் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து அந்த கலவையை முகத்தில் கருமையாக இருக்கும் இடங்களில் தடவவும்.
20 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட்டு அதன் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும், இதை வாரத்திற்கு மூன்று முறை செய்தால் கருமை காணாமல் போய் விடும்.
2. தக்காளியையும் முல்தானி மெட்டியையும் சேர்த்து கெட்டியாக கலக்கி 15 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள்.
இதை தடவிய பிறகு அதிகம் பேசக் கூடாது, முக அசைவுகள் கூடாது. ஏனெனில் அது சுருக்கங்களுக்கு வழிவகுக்கும். 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவி விட்டால் முகக்கருமை நீங்கும்.
3. தக்காளி மற்றும் பாலை நன்றாக மிக்ஸ் செய்து நன்றாக முகம் மற்றும் கழுத்தில் தடவி ஐந்து நிமிடங்களுக்கு முகத்தில் அப்படியே விட்டுவிட்டு தண்ணீரில் கழுவவும்.
எலுமிச்சை சாறுடன் தக்காளி ஜூஸ் சேர்த்து முகத்தில் தடவவும் முகத்தில் இவை நன்கு ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.
இது போன்ற வீட்டில் இருக்கும் டிப்ஸ்களை செய்தால் சரும பாதிப்பு குறையும்.