அம்பானி வீட்டு ப்ரீ வெட்டிங்கில் விருந்தினர்களுக்கு இத்தனை கட்டுப்பாடுகளா..

by Editor News

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.

மார்ச் 1 முதல் 3 வரை பல நூறு கோடி செலவில் நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல நூறு கோடி செலவில் நடந்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது.

இந்த ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கு நடந்த விரிவான மற்றும் துல்லியமான திட்டமிடல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற பல்வேறு கருப்பொருள்கள் அடிப்படையில் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அதன் பின்னணியில் நடந்த திட்டமிடல் பற்றி பலருக்கும் தெரியாது.

உதாரணமாக, விருந்தினர்கள் கண்டிப்பாக 1 பை மற்றும் 1 ஹாண்ட் பேக் மட்டுமே எடுத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், பிரபல விருந்தினர்கள் ஆடம்பர கூடாரங்களில் வைக்கப்ட்டனர் என்பது அனைவருக்கும் தெரியும்,

துணிகளை ஸ்டீம் செய்யும் சேவை இருந்தது. ஆனால், அதற்கு 3 மணி நேரம் காத்திருக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிகையலங்கராம், மேக்கப் ஆகியவற்றுக்கு பிரபல விருந்தினர்களுக்கு சேவைகள் கிடைக்கப்பெற்றன.

ஆனால் அது முதலில் வருபவர்களுக்கு முதலில் சேவை என்ற அடிப்படையில் இருந்தது. இப்படி பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் ப்ரீ வெட்டிங் கொண்டாட்ட கட்டுப்பாடுகள், ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் கொள்கைகள் ஆகியவை குறித்து பார்க்கலாம்.

விருந்தினர்களுக்கு மும்பை/டெல்லியில் இருந்து தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஒவ்வொருவரின் பொருட்களுக்கும் இடமளிக்கும் வகையில், ஒரு நபருக்கு ஒரு லக்கேஜ் பேக் மட்டுமே கொண்டு வர அனுமதி வழங்கப்பட்டது. ஒருவேளை அதிகமான லக்கேஜ்களை எடுத்துச் சென்றால், அது நீங்கள் வரும் அதே விமானத்தில் ஜாம்நகருக்கு வந்து சேரும் என்று எங்களால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்று விருந்தினர்களுக்கான அறிவுறுத்தலில் கூறப்பட்டது.

ஒவ்வொரு நிகழ்வுக்கும் தீம்களின் அடிப்படையில் ஆடைகள் அணிய திட்டமிடப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை விருந்தினர்கள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஸ்டீமிங்கிற்கு கொடுக்கப்பட்ட எந்த ஆடைகளும் 3 மணி நேரத்திற்குள் திருப்பித் தரப்படும் என்பதை நினைவில் கொள்ளவும், அதன்படி திட்டமிடவும். 3 மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தில் ஆடைகளை எதிர்பார்ப்பது சாத்தியமாகாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்து.

அனைத்து தங்குமிடங்களிலும் ஹேர் ஸ்டைலிங், புடவை கட்டுதல் மற்றும் அடிப்படை ஒப்பனை சேவைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.. முதலில் வருபவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைத்து விருந்தினர்களுக்கும் இந்த சேவைகள் வழங்கப்பட்டன,

விழா நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு வந்த உடனேயே எங்கு தங்குவது, யாரை அணுகுவது, மற்றும் உணவுத் தேவைகள் அல்லது, மருத்துவ தேவைகள் உள்ள எவரும் விருந்தோம்பல் குழுவை முன்கூட்டியே தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

Related Posts

Leave a Comment