தேவையான பொருட்கள் :
சிக்கன் – 1 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 3
இஞ்சி பூண்டு விழுது – 1 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
மிளகு தூள் – 1/2 ஸ்பூன்
சீராக தூள் – 1/4 ஸ்பூன்
கரம் மசாலா – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கல் உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் சிக்கன் துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி எடுத்து கொள்ளுங்கள்.
பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு கொள்ளவும்.
சோம்பு பொரிந்ததும் கறிவேப்பிலை போட்டு கலந்து அதனுடன் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கொள்ளுங்கள்.
பிறகு அவற்றுடன் நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் சிக்கன் துண்டுகளை போட்டு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதனுடன் மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி மற்றும் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கடாயை மூடி வேகவிடவும்.
குறிப்பு : அடிக்கடி மூடியை திறந்து சிக்கனை கலந்துவிட்டுக்கொள்ளவும்.
சிக்கன் வெந்து வறுபட்டு எண்ணெய் பிரிந்து வந்ததும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அதன் பச்சை வாசனை போனவுடன் அதனுடன் மிளகு தூள், மல்லி தூள், மிளகாய் தூள், சீரகம் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக கலந்துவிட்டு கொள்ளவும்.
பின்னர் அதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி மூடி வைத்து சமைக்கவும்.
மசாலா வாசனை எல்லாம் போய் சிக்கன் நன்றாக வெந்தவுடன் சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை தூவி கிளறி இறக்கினால் சுவையான செட்டிநாடு சிக்கன் சுக்கா ரெடி…