64
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றை படமாக சஜித் நதியத்வாலா தயாரிக்க இருக்கிறார் என்றும், அந்த படத்தினை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்க போகிறார் என்றும் செய்தி வெளியாகி இருக்கிறது.
கங்குலியாக ஹிந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்க போகிறாராம். இந்த படம் பற்றி பேச தான் சஜித் நதியத்வாலா சமீபத்தில் சென்னைக்கு வந்து ரஜினியை சந்தித்துவிட்டு சென்று இருக்கிறார்.
இந்த படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.