முன்னொரு காலத்தில் வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தாலே மோர் கொடுக்கும் பழக்கம் இருந்தது, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கோடை காலத்திற்கு ஏற்ற பானம் என்றால் அது மோர் தான்.
மோரில் கறிவேப்பிலை, இஞ்சி, பச்சைமிளகாய், சீரகம், உப்பு என மருத்துவகுணங்கள் நிறைந்த பொருட்களுடன் தயாரிக்கும் போது மிகச்சிறந்த பானமாக மாறுகிறது.
மோரில் புரதங்கள், விட்டமின்கள், தாதுக்கள், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. உடலில் நீரேற்றத்தை சமநிலையில் வைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக இதில் உள்ள புரோபயாடிக்குகள், நல்ல பக்டீரியாக்கள், லாக்டிக் அமிலம் போன்றவை செரிமானத்தை சீர்ப்படுத்துகின்றன.
மலச்சிக்கலை தடுப்பதுடன் Irritable Bowel Syndrome நோயாளர்களுக்கு சிறந்த தீர்வை வழங்குகிறது.
இதில் உள்ள கால்சியம் சத்து எளிதில் உறிஞ்சப்படுவதால் பற்கள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படுகிறது.
மோரில் விட்டமின் சி மற்றும் பி இருப்பதால் சருமத்தின் பாதுகாப்பிற்கும், எடைப் பராமரிப்பிற்கும் துணைபுரிகிறது.
கோடைகாலங்களில் தினமும் ஒரு டம்ளர் மோர் அருந்துவது உடலை குளிர்ச்சியடையச் செய்யும்.
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி நோய்த்தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
இத்தனை நன்மைகள் இருந்தாலும் மோரை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது, வயிற்று உபாதைகள் வரலாம்.
வெயிலில் செல்லும் முன் மோர் அருந்தலாம், ஆனால் வெயிலில் சென்றுவந்தவுடன் குளிர்ந்த மோரை அருந்தக்கூடாது.
கோடைக்காலங்களில் தினமும் ஒரு டம்ளர் மோர் அருந்துவது உடலை குளிர்ச்சியாக வைப்பதுடன் சூட்டால் உண்டாகும் தொந்தரவுகளை குறைக்கும்.