தமிழ்நாட்டில் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில் டெல்லியில் அனைத்து பெண்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பட்ஜெட்டில் ஆரம்பித்துள்ளார்.
மகளிர்க்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தமிழ்நாட்டில் தான் தொடங்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து ஒரு சில மாநிலங்களில் இந்த திட்டம் தொடர்ந்து வருகிறது என்பதும் பார்த்து வருகிறோம்.
ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தை போல எந்த மாநிலத்திலும் தகுதி உள்ள பெண்களுக்கு மட்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படாமல் அனைத்து பெண்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் டெல்லியில் 18 வயதில் நிரம்பிய பெண்கள் அனைவருக்கும் மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து டெல்லியில் உள்ள பெண்கள் தங்கள் மாநில முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.