மேஷம்:
உங்கள் தனிப்பட்ட வளர்ச்சியை மையப்படுத்திய வாய்ப்பை எதிர்பார்க்கலாம். உங்கள் ஈடுபாடு மற்றும் கடின உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீது எவ்வளவு அக்கறை வைத்துள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். நிதி சார்ந்த விவகாரங்களில் கடந்த கால தவறுகளை தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்:
உங்கள் புத்தாக்க சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். பணியிடத்தில் இலக்கு நோக்கி கவனம் செலுத்தினால் உங்களுக்கான உற்பத்தி அதிகரிக்கும். குடும்ப உறவுகளிடம் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடவும். லாபம் தருகின்ற நீண்ட கால முதலீடுகளை இன்று செய்யலாம்.
மிதுனம்:
அறிவாற்றலை வளர்க்கும் புதிய வழிகளை தேடிக் கொள்ளுங்கள். உங்கள் உரையாடல் திறன் இன்று வெளிப்படும். உங்கள் யோசனைகளை தெரிவித்து கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளலாம். குடும்ப உறவுகள் உடனான உரையாடல் அர்த்தமுள்ள வகையில் அமைய வேண்டும். புதிய நகருக்குப் பயணம் செய்யலாம்.
கடகம்:
உங்கள் மன ஆறுதல் மற்றும் சுய ஆரோக்கியம் குறித்து அக்கறை செலுத்துங்கள். முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது உங்கள் ஆழ்மனம் வழிகாட்டியாக அமையும். இயற்கையுடன் தொடர்புடைய பயணத்தை மேற்கொள்ளலாம். நிதி சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது எச்சரிக்கை அவசியம்.
சிம்மம்:
உங்கள் பலம் என்ன என்பதை உணர்ந்து பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியே வரவும். உங்கள் தலைமைத்துவ பண்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நிதி லாபம் அதிகரிக்கும். நீண்ட கால பொருளாதார இலக்குகள் குறித்து கவனம் செலுத்தலாம். உடற்பயிற்சியில் ஈடுபடுவது உங்களின் நம்பிக்கையை அதிகரிக்கும்.
கன்னி:
உங்கள் சுய மேம்பாடு குறித்து அக்கறை செலுத்துங்கள். உங்கள் இலக்கை அடைய எதார்த்த சிந்தனை கொண்டிருக்க வேண்டும். பணியிடத்தில் வேலைகளின் மீது மிகுந்த கவனம் கொண்டிருக்க வேண்டும். வெளிப்படையான உரையாடல் மூலம் உங்கள் குடும்ப உறவுகளை பலப்படுத்திக் கொள்ளலாம்.
துலாம்:
உங்கள் ஆழ்மனதிற்கு அமைதியை தேடிக் கொள்ளவும். சமயோஜித திறன்களால் பணியிடத்தில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். புரிதல் இருந்தால் குடும்ப உறவுகள் பலப்படும். கலை, பண்பாடு, அழகியல் சார்ந்த பயணங்களை மேற்கொள்ளலாம். அது உங்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
விருச்சிகம்:
தன்னியல்பை புரிந்து கொள்வது அவசியம் ஆகும். மன உறுதி மற்றும் கவனம் ஆகியவை மூலம் பணியிடத்தில் உள்ள சவால்களை முறியடிக்கலாம். உங்கள் மனம் கவர்ந்தவர்கள் மீது எவ்வளவு அன்பு கொண்டுள்ளீர்கள் என்பதை புரிய வைக்கவும். நீண்ட கால முதலீடுகள் நிலையான வளர்ச்சியை தரும்.
தனுசு:
உங்கள் எண்ணங்களை விரிவாக்க உதவும் அனுபவங்களை தேடிக் கொள்ளுங்கள். உங்கள் ஆர்வம் உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஈர்க்கும். உங்கள் இலக்குகளின் மீது கவனமாக இருக்கவும். குடும்பத்துடன் பயனுள்ள வகையில் நேரத்தை செலவிடுங்கள். நிதி சார்ந்த விஷயங்களில் ஆழ்மன முடிவுகளை நம்பலாம்.
மகரம்:
அடையத் தகுந்த இலக்குகளின் மீது கவனம் செலுத்துங்கள். உங்கள் கடின உழைப்பு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றுக்கு பலன் கிடைக்கும். தொழில்முறை வளர்ச்சி குறித்து கவனம் செலுத்தவும். புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலான பயணங்களை இன்று மேற்கொள்ளலாம்.
கும்பம்:
உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்துங்கள். புதிய யோசனைகளை செயல்படுத்தலாம். உங்கள் புத்தாக்க சிந்தனை மேலோங்கும். உங்கள் மனசாட்சியை நம்பி தைரியமான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். உங்கள் மதிப்புக்கு தகுந்த பொருளாதார வாய்ப்புகளை தேடிக் கொள்ளுங்கள்.
மீனம்:
மன ஆறுதல் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளில் கவனம் செலுத்தவும். பணியிடத்தில் உங்கள் புத்தாக்க சிந்தனை தான் மாபெரும் சொத்து. குடும்ப உறுப்பினர்கள் உடனான புரிதலை அதிகரிக்கவும். அமைதியான இடத்துக்கு பயணம் செய்யவும். நிதி சார்ந்த முடிவுகளில் உங்கள் ஆழ்மனதை நம்பலாம்.