மொறுமொறு சிக்கன் 65

by Editor News

தேவையான பொருட்கள் :

கோழி – 3/4 கிலோ

கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்

சோள மாவு – 1/2 கப்

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்

மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை :

முதலில் கோழித்துண்டுகளை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரில் அலசி எடுத்து கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் அலசிய கோழித்துண்டுகளை போட்டு அதனுடன் கொட்டியான தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கொள்ளுங்கள்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

பிசைந்து வைத்துள்ள இந்த கோழி துண்டுகளை ஒரு மணிநேரம் மூடி போட்டு ஊறவிடவும்.

ஒருமணிநேரம் கழித்து மரினேட் செய்து வைத்துள்ள கோழியுடன் சோளமாவு போட்டு அதில் சிறிதளவு தெளித்து நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும்.

எண்ணெய் காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து சிக்கன் துண்டுகளை ஒன்று ஒன்றாக எண்ணெய்யில் போட்டுக்கொள்ளுங்கள்.

நான்கு நிமிடங்கள் கழித்து கோழி துண்டுகளை கரண்டியை கொண்டு கலந்துவிட்டு கொள்ளுங்கள்.

7 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் எண்ணெய்யின் சலசலப்பு தன்மை அடங்கி சிக்கன் முழுமையாக வெந்திருக்கும்.

தற்போது சிக்கன் 65 துண்டுகளை எண்ணெய்யில் இருந்து எடுத்து சூடாக அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்.

Related Posts

Leave a Comment