கால்சியம், வைட்டமின் பி மற்றும் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் பி2, கொழுப்பில் கரையும் வைட்டமின்களான ஏ, டி மற்றும் வைட்டமின் இ போன்ற ஊட்டச்சத்துகள் பாலில் அதிகமாக உள்ளது. வழக்கமாக பால் என்றாலே வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். ஆனால் நாம் தினமும் அருந்தும் பசும் பால் மட்டும் ஏன் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது தெரியுமா?
இதற்கு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர். பாலில் கால்சியமோடு சேர்த்து புரதமும் உள்ளது. பசும்பாலை தவிர மற்ற பாலில் கேசின் என்ற புரதம் இருப்பதால் அவை வெள்ளை நிறமாக இருக்கின்றன. ஆனால் பசும்பாலில் கரோடீன் என்ற புரதம் உள்ளது. அதனால் தான் பசும்பால் மஞ்சள் நிறத்தில் இருக்கிறது எனக் கூறுகிறார்கள்.
அதுமட்டுமின்றி மஞ்சள் நிறமாக இருப்பதற்கு பசுக்களுக்கு கொடுக்கப்படும் தீவனமும் முக்கிய காரணமாகும். செடிகளில் வைட்டமின் ஏ கிடையாது. ஆனால் ப்ரோ வைட்டமின் என்ற கரோடீனாய்டு உள்ளது. இதன் காரணமாக விலங்குகள் செடிகளை விழுங்கியவுடன் அவை வைட்டமின் ஏ-வாக மாற்றமடைகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆரஞ்சு, மஞ்சள் நிறங்களில் இருப்பதற்கும் கரோடீனாய்டு தான் காரணம். அதேப்போல் பச்சை இலை காய்கறிகளிலும் கரோடீனாய்டு உள்ளது.
புற்கள் மற்றும் மலர்களில் பீட்டா கரோடீன் இயற்கையாகவே உள்ளது. இவற்றையே பசுக்கள் உட்கொள்கின்றன. அதன்பிறகு இந்த கரோடீன், பாலில் கொழுப்பாக சேர்கிறது. பசும்பாலில் 87 சதவிகிதம் தண்ணீரும் 13 சதவிகிதம் திரவமும் உள்ளது. மேலும் இதிலுள்ள லிப்பிடுகள் (கொழுப்பு), கால்சியம் காம்ப்ளக்ஸ், புரொட்டீன் கேசீன் போன்ற பல்வேறு பொருட்களுக்கு நிறங்களை உறிஞ்சும் தன்மை கிடையாது.
வைட்டமின் ஏ-க்கு முன்னோடியான பீட்டா கரோடீன் ஒரு நிறமியாகும். இவை பசும்பாலில் உள்ள கொழுப்பில் இருக்கிறது. பசுவின் இனம், அதற்கு கொடுக்கப்படும் தீவனம், கொழுப்பு உருண்டைகளின் அளவு, பாலில் இருக்கும் கொழுப்பு சதவிகிதம் போன்ற பல காரணிகளும் பாலின் மஞ்சள் நிறத்தின் அடர்த்தியை தீர்மானிக்கின்றன. நமது மூளை வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் கந்தகம் பசும்பாலில் அதிகளவு உள்ளது. அதுமட்டுமின்றி நமது உடலுக்கு தேவையான புரதமும் கால்சியம் சத்தும் பசும்பால் குடிப்பதன் மூலம் நமக்கு அதிகமாக கிடைக்கிறது.