உக்ரேனிற்கு மேற்குலகநாடுகள் தங்கள் படையினரை அனுப்பக்கூடும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.’
பரீசில் இடம் பெற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் யுத்தத்தில் ரஷ்யா வெல்வதை தடுப்பதற்காக எங்களால் ஆனா அனைத்தையும் செய்வோம். நான் இதனை மிகுந்த உறுதிப்பாட்டுடன் தெரிவிக்கின்றேன்.
அத்துடன் மேற்குலக படையினரை ஒருபோதும் உக்ரைனிற்கு அனுப்பகூடாது என்று அன்று சொன்னவர்கள் விமானங்களையும் ஏவுகணைகளையும் டிரக்குகளையும் அனுப்பகூடாது எனவும் சொன்னார்கள் தற்போது உக்ரைனிற்கு அதிகளவு ஏவுகணைகள் டாங்கிகளை அனுப்பவேண்டும் என தெரிவிக்கின்றனர்” இவ்வாறு பிரான்ஸ் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.