இத் திரைப்படத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யா ஹோப், சரஸ் மேனன், சுரேஷ் சக்கரவர்த்தி, ஜீவா சுப்பிரமணியன், விலங்கு கிச்சா ரவி உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்
சென்னையில் உள்ள அடுத்தடுத்து உள்ள காவல் நிலைய வாசலில் கால், கை, உடம்பு என தனித்தனியாக எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகிறது.
காவல் நிலையத்தில் குற்றச் செயலுக்கான கிரைம் ஸ்டோரி மற்றும் குற்றவாளிகளை உருவங்களை ஸ்கெட்ச் செய்பவருமான சிவா(வைபவ்) காவல்துறையினரின் விசாரணைக்கு உதவி செய்ய அழைக்கப்படுகிறார்.
அவரின் முயற்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் பாகங்கள் வெவ்வேறு நபர்களுடையது என (சிவா)வைபவ் தெரிவிக்கிறார். அதேசமயம் இந்த வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். இதனால் வழக்கு தான்யா ஹோப் கைக்கு வருகிறது.
வைபவ் தான்யா ஹோப் ஆகிய இருவரும் இணைந்து வழக்கின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் குற்றவாளிகளை நெருங்கும்போது அடுத்தடுத்து அதிர்ச்சியான சம்பவங்கள் நடக்கின்றது
காணாமல் போன இன்ஸ்பெக்டரை கண்டுபிடித்தார்களா? இந்த கொலைகளுக்கான காரணம் என்ன? உண்மையான கொலை குற்றவாளிகளை கண்டுபிடித்தார்களா? என்பது தான் படத்தின் கதை. வைபவ் எதார்த்தமாகவும் சிறப்பாகவும் தனது நடிப்பு திறமையை கொடுத்துள்ளார்
தான்யா ஹோப் மிடுக்கான போலீஸாக சிறப்பாக நடித்துள்ளார். நந்திதா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கேற்றார் போல சிறப்பாக நடித்துள்ளார்
அரோல் குரோலியின் பின்னணி இசை படத்துக்கு கூடுதல் பலம். வழக்கமான க்ரைம் த்ரில்லர் படமாக இல்லாமல் முற்றிலும் மாறுபட்டு உண்மை சம்பவ கதையை மையமாக வைத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஷெரிஃப்.