தேவையான பொருட்கள் :
சப்பாத்தி- 4
வெங்காயம்- 2
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது- தேவையான அளவு
மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள்- 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 1
உப்பு- தேவையான அளவு
கொத்தமல்லி, கருவேப்பிலை- தேவையான அளவு
செய்முறை :
கோதுமை மாவை பிசைந்து சப்பாத்தி தயார் செய்து கொள்ளவும், வெங்காயம்- தக்காளியை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக்கி கொள்ளவும், பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் சேர்க்கவும், ஓரளவு வதங்கியதும் தக்காளி சேர்க்கவும்.
இதனுடன் மிளகாய்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்க்கவும், எண்ணெய் பிரிந்து வரும் நேரத்தில் நறுக்கி வைத்துள்ள சப்பாத்தியை போட்டு கிளறவும்.
சிறிதளவு தண்ணீரை தெளித்து விட்டு நன்றாக வதங்கியதும் கொத்தமல்லி இழை தூவி இறக்கினால் சுவையான கொத்து சப்பாத்தி தயார்!!!