கம்பு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்ற ஒரு தானியமாகும். குறிப்பாக இதில்,
புரதச்சத்து,
நார்ச்சத்து,
மெக்னீசியம்,
பொட்டாசியம்,
இரும்புச்சத்து
உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதோடு குளுட்டன் அழற்சி இல்லாதது. செலியாக் போன்ற பிரசசினை உள்ளவர்களுக்கு இது மிகச்சிறந்த உணவாக இருக்கும். உடலின் செரிமான ஆற்றலை மேம்படுத்தும்.
எடை குறைக்க கம்பு நல்லதா?
ஆம், உடல் எடையைக் குறைப்பதற்கு கம்பு மிகச்சிறந்த உணவு தான். அதிலுள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் பசியைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும்.
உணவு சாப்பிட்டதும் நிறைவைக் கொடுக்கும். இதிலுள்ள காம்ப்ளக்ஸ் கார்போ1ட்ரேட் உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுக்கும். அதேசமயம் கலோரியும் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ள ஒரு தானியம்.
கம்பில் நார்ச்சத்தின் அளவு அதிகம். இது சாப்பிட்டு நீண்ட நேரம் வரையிலும் வயிறு முழுமையாக இருக்கிற உணர்வைக் கொடுக்கும்.
இதை உங்களுடைய வழக்கமான உணவில் சேர்த்துக் கொள்ளும்போது, தேவையற்ற மற்ற ஜங்க் உணவுகள், இடையிடையே ஸ்நாக்ஸ்கள் சாப்பிடும் எண்ணத்தைத் தடுக்கும்.
இதனால் செரிமான ஆற்றல் அதிகரித்து, உடலின் வளர்சிதை மாற்றம் மேம்பட்டு உடல் எடையைக் குறைக்க உதவி செய்யும்.