பைசர் (Pfizer), மொடர்னா (Moderna) மற்றும் அஸ்ட்ராஜெனிகா கொவிட் -19 (AstraZeneca Covid-19) தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு இதயம், மூளை மற்றும் இரத்தம் உறைதலில் அரிதான பக்க விளைவு ஏற்பட்டுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவான குளோபல் வாக்சின் டேட்டா நெட்வொர்க் நடத்திய ஆய்விலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஆர்ஜென்டினா, அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 99 மில்லியன் மக்களிடம் குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பைசர், மோர்டானா மற்றும் அஸ்ட்ராஜெனெகா கொவிட் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்ட மக்களிடம் 13 வகையான நோய்கள் இனம்காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.