சைரன் திரைவிமர்சனம்..

by Editor News

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் சைரன். இப்படத்தை அறிமுக இயக்குனரான ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தை ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சைரன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.

கதைக்களம் :

கொலை பழியை சுமந்துகொண்டு சிறையில் இருக்கும் ஜெயம் ரவி பரோலில் வெளியே வருகிறார். தனது தந்தை ஒரு கொலையாளி என நினைத்துக்கொண்டு இருக்கும் ஜெயம் ரவியின் மகள் அவரை வெறுத்து ஒதுக்கி வர, மகளிடம் தனது பாசத்தை வெளிப்படுத்த முடியாமல் ஏங்கி தவிக்கிறார் ஜெயம் ரவி.

இவருடைய கதை ஒரு புறம் நகர, காவல் துறை அதிகாரியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் தனது கட்டுப்பாட்டில் இருந்த கைதியை அடித்து கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படுகிறார்.

செய்யாத கொலைக்காக சிறையில் தண்டனை அனுபவித்து பரோலில் வெளியே வந்திருக்கும் ஜெயம் ரவியும், போலிஸ் கீர்த்தி சுரேஷும் புதிதாக நடக்கும் கொலைகளுக்காக ஒரே நேர்கோட்டில் இணைய, அதன்பின் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும். சொல்ல வந்த கதையை கச்சிதமாக கூறியிருந்தாலும் அது வலுவாக இல்லை. அதே போல் எமோஷன் சுத்தமாக ஒர்க்கவுட் ஆகவில்லை. அதுவே இப்படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்துவிட்டது.

ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவருடைய நடிப்பும் பக்கா. இளம் தோற்றத்திலும், நடுத்தர வயதானவராகவும் நடிப்பில் மிரட்டுகிறார் ஜெயம் ரவி. போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்திப் போகிறார் கீர்த்தி சுரேஷ். திமிராகவும், கம்பீரமாகவும் பட்டையை கிளப்பியுள்ளார்.

யோகி பாபுவின் நகைச்சுவை எடுபடவில்லை. சில இடங்கள் ரசிக்கும்படியாக இருந்தாலும், எதிர்பார்த்த நகைச்சுவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. யுவினா, சாந்தினி, சமுத்திரக்கனி, அனுபமா பரமேஸ்வரன், அழகம் பெருமாள், சுரேந்தர் ஆகியோர் நடிப்பு ஓகே.

ஜி.வி. பிரகாஷ் பாடல்கள் மனதை தொடவில்லை. பின்னணி இசை படத்திற்கு உதவுகிறது. ஒளிப்பதிவு படத்திற்கு பலம், எடிட்டிங் சுமார். ‘ஜாதி இல்லனு சொல்றவன் என்ன ஜாதினு தேடுறத முதல நிப்பாட்டுங்க’ போன்ற வசனங்கள் கவனத்தை ஈர்க்கிறது.

பிளஸ் பாயிண்ட்

ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நடிப்பு

வசனங்கள்

மைனஸ் பாயிண்ட்

எமோஷன் ஒர்க்கவுட் ஆகவில்லை

திரைக்கதை வலுவாக இல்லை

பாடல்கள்

மொத்தத்தில் சைரன் Outdated Story-ஆக இருந்தாலும் கண்டிப்பாக பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment