சிலர் எப்பொழுதும் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கே தெரியாது. நீங்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க உங்க உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களும் ஒரு காரணமாக இருக்கலாம். இதனால் நீங்கள் உங்க துணைக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. இது உங்க இருவருக்கிடையே மனக்கசப்பை உண்டாக்க வாய்ப்பு உள்ளது. எனவே எப்பொழுதும் பாலியல் ரீதியான போக்கு இருந்தால் அதை நீங்கள் கவனிக்க வேண்டும். அதற்கு முதலில் உங்க உடலைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள் பாலியல் மருத்துவர்கள். இந்த மாதிரியான மனப்போக்கு எதன் காரணமாக ஏற்படுகிறது என்பதை கண்டறிந்தால் மட்டும் தான் அதிலிருந்து விடுபட முடியும். கீழ்கண்ட விஷயங்கள் தான் நீங்கள் பாலியல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க காரணங்கள்.
ஹார்மோன் மாற்றங்கள் :
நம் உடலில் பாலியல் ரீதியான உணர்வு ஏற்பட ஹார்மோன்கள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. நம் உடலில் உள்ள பாலியல் ஹார்மோன் ஆன ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஆகியவை வெவ்வேறு காலங்களில் மாறுபடும். இந்த சிறிய சிறிய மாற்றங்கள் அவ்வப்போது நடைபெற்று கொண்டே வருகிறது. உதாரணமாக பெண்களின் அண்டவிடுப்பின் போது ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகமாக இருக்கும். இந்த ஏற்ற இறக்கமே மிக உயர்ந்த செக்ஸ் உந்துதலுக்கு காரணமாக அமைகிறது. ஆண்களில் அதிகளவு டெஸ்டோஸ்டிரான் இருப்பது அதிக ஆண்மைத் தன்மையை குறிக்கிறது.
பருவமடைதல் பருவம் :
பருவமடையும் வயதில் இருக்கும் குழந்தைகள் அதிக பாலியல் உந்துதலை அனுபவிக்கிறார்கள். இது ஹார்மோன்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதால் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கிறது. 20 களின் பிற்பகுதியிலிருந்து 40 களின் முற்பகுதி வரையிலான நடுத்தர வயது பெண்களுக்கும் பாலியல் தன்மை அதிகளவில் இருக்கிறது. எனவே இந்த வயதில் அவர்கள் பாலியல் நடவடிக்கை மற்றும் கற்பனைகளை பற்றி சிந்திக்க வாய்ப்பு உள்ளது.
அடிக்கடி உடற்பயிற்சி செய்தல் :
உடற் செயல்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுவது வழக்கத்தை விட செக்ஸ் இயக்கத்தை அனுபவிக்க வழி வகுக்கும். திடீர் எடை இழப்பு மேலும் அடிக்கடி பாலியல் செயல்பாடுகளில் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். ஏனெனில் நாம் சுறுசுறுப்பாக இருக்கும் போது உடலுடன் அதிக பிணைப்புடன் இருக்க விருப்பப்படுகிறோம். உடற்பயிற்சி செய்வது எப்போதும் உங்களை ஒரு புதிய மனநிலையில் வைக்க உதவி செய்யும். உங்களை ஒரு மகிழ்ச்சியான நபராக உணர வைக்கும்.
மன அழுத்தம் இல்லாத உறவை பெறுதல் :
நீங்கள் ஒரு ஆரோக்கியமான உறவில் இருக்கும் போது சரியான உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தொடர்பை பெறுவீர்கள். இது உங்க துணையுடன் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும். குறைவான விவாதங்கள் இருந்தால் நீங்கள் வேடிக்கையாகவும் நிறைவான பாலியல் வாழ்க்கையுடன் இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்களின் ஆழமான உணர்ச்சிகள் பாலியல் உணர்வை மேம்படுத்துகின்றன. இது சிறந்த உடலுறவுக்கு வழி வகுக்கும்.