சில பயனுள்ள சமையல் குறிப்புகள்..

by Editor News

1.நாம் தினமும் பயன்படுத்தும் அரிசியில் வண்டு பிடிக்காமல் இருக்க வசம்பு அல்லது பட்டை துண்டுகளை அரிசியில் போட்டு வைக்கலாம்.

2. தேங்காய் எண்ணெய் கெட்டு போகாமல் இருக்க அதில் 3 மிளகு போட்டு வைத்து பயன்படுத்தி வர நீண்ட நாள் கெட்டு போகாமல் வரும்‌.

3. நாம் தினமும் பயன்படுத்தும் மளிகை பொருட்கள் வண்டு பிடிக்காமல் நீண்ட நாள் இருக்க அதில் காய்ந்த மிளகாயை போட்டு வைத்தால் வண்டு பிடிக்காது.

4. மொத்தமாக வாங்கி பயன்படுத்தும் புளி கெட்டு போகாமல் இருக்க புளியில் 2 அல்லது 3 தேங்காய் ஓட்டை போட்டு வைத்தால் புளி கெட்டு போகாது.

5.எலுமிச்சம் பழம் நீண்ட நாள் கெட்டு போகாமல் இருக்க அதனை நியூஸ் பேப்பரில் வைத்து மடக்கி பிரிட்ஜில் வைத்தால் 1 மாதம் வரை கெடாமல் இருக்கும்.

6. பூண்டு நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க உப்பை வறுத்து ஒரு டப்பாவில் கொட்டி அதில் பூண்டை வைத்து பயன்படுத்தி வரலாம்.

Related Posts

Leave a Comment