85
சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது.
சி.பி.எஸ்.இ. 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. நாடு முழுவதும் 36 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகின்றனர்.சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் மார்ச் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதேபோல் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்இன்று முதல் மார்ச் 26 வரை நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்டோரும், 12- ஆம் வகுப்பு தேர்வை 15 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் எழுதுகின்றனர்.