மேஷம்:
உங்கள் தைரியம் மற்றவர்களை கவர்ந்திழுக்கும். உங்கள் ஆழ்மனதின் மீது நம்பிக்கை வைக்கவும். உங்கள் பார்ட்னர் உடனான மனப்பூர்வமான உரையாடல் உங்கள் காதல் வாழ்க்கையில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். மேலும் உங்கள் காதல் வாழ்க்கையில் கூடுதல் அன்பு வந்து சேரும்.
ரிஷபம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் ஒற்றுமை மேலோங்கும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதில் நீங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். உங்கள் பார்ட்னர் உடனான பந்தத்தை பலப்படுத்துவதற்கு இது உதவும். ரொமான்ஸ் வாய்ப்புகள் இன்று அதிகமாக இருக்கும்.
மிதுனம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் உரையாடல் கனிவானதாக அமைய வேண்டும். அறிவுத்திறனும், வசீகரமும் உங்களுக்கான பெரும் சொத்துக்கள் ஆகும். இருப்பினும் உரையாடல்களின் போது நேர்மையை கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் பார்ட்னருடன் அர்த்தமுள்ள வகையில் விவாதிப்பதன் மூலம் புரிந்துணர்வு மேலோங்கும்.
கடகம்:
உங்கள் மனம் முழுவதும் இன்றைக்கு உணர்வுகளால் நிரம்பியிருக்கும். உங்கள் அன்புக்குரிய நபர்களுடன் பலனுள்ள வகையில் நேரத்தை செலவிட வேண்டும். அதன் மூலமாக உங்கள் பந்தம் பலப்படும். மாலைப் பொழுதில் உங்களுக்கும், உங்கள் பார்ட்னருக்கும் இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
சிம்மம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று நம்பிக்கை வெளிப்பட வேண்டும். உங்கள் வசீகரம் காந்த சக்தி கொண்டதாக இருக்கும். அதன் மூலமாக புரிந்துணர்வு மேலோங்கும். உங்கள் பார்ட்னரிடம் காதலின் மென்மையான போக்கை கடைப்பிடிக்கவும். இது இருவருக்கும் இடையிலான மரியாதையை அதிகரிக்கச் செய்யும்.
கன்னி:
காதலில் உள்ளார்ந்த அறிவை நீங்கள் தேடிக் கொள்ள வேண்டும். நீங்கள் எதார்த்த சிந்தனையுடன் செயல்படுவீர்கள். அதே சமயம் உங்கள் மனம் சொல்வதையும் நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் சுயத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை பெறுவீர்கள். மனப்பூர்வமான உரையாடலால் பார்ட்னருடன் புரிந்துணர்வு மேலோங்கும்.
துலாம்:
உங்கள் காதல் வாழ்க்கை இன்று சீரானதாக இருக்கும். உங்கள் உறவில் நல்லிணக்கம் மேலோங்கும். உங்கள் தேவைகளையும், விருப்பங்களையும் வெளிப்படுத்த தயங்க வேண்டாம். காதல் உறவில் பரஸ்பர நம்பிக்கையும், மரியாதையும் வேண்டும். அதுதான் முழு திருப்தியை தரும்.
விருச்சிகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று மாற்றம் ஏற்பட இருக்கிறது. உங்கள் வேகம் மற்றும் கனவை நோக்கிய சிந்தனை ஆகியவை பாராட்டுக்கு உரியது. இருப்பினும் மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் உறவில் வளர்ச்சி மற்றும் நம்பிக்கை அதிகரிக்கும்.
தனுசு:
உங்கள் காதல் வாழ்க்கையில் சீரான மனநிலையுடன் செயல்பட வேண்டும். சாகச சிந்தனைகள் உங்கள் காதல் வாழ்க்கையில் குதூகலத்தை ஏற்படுத்தும். எதார்த்த சிந்தனையை உணர்ந்து செயல்பட வேண்டும். சுதந்திரம் மற்றும் பொறுப்புணர்வுக்கு இடையிலான இணக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்.
மகரம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று பிரச்சனைகள் இருக்கும். உங்கள் லட்சியம் மற்றும் மன உறுதி ஆகியவை வெற்றிக்கு வழிவகுக்கும். காதல் உறவில் அதிகாரப் போட்டியை தவிர்க்க வேண்டும். அச்சத்தை போக்கினால் மட்டுமே சுதந்திரமும், மகிழ்ச்சியும் கிடைக்கும். உங்கள் நேர்மைக்கு பலன் உண்டு.
கும்பம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் ஈர்ப்பு அதிகரிக்கும். உங்கள் தனித்துவமான சிந்தனை பலரையும் ஈர்க்கும். திறந்த மனதுடன் செயல்படுங்கள் மற்றும் சவால்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மனம் சொல்வதை கேட்டு நடக்கவும். பொறுப்புகளை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்:
காதல் வாழ்க்கையில் உங்கள் ஆழ்மனம் சொல்வதைக் கேட்கவும். பிறருடன் பலமான பந்தத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள் என்றாலும், மனக் குழப்பம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ஆழ்மனம் உங்களின் மகிழ்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும்போது பந்தம் பலப்படும்.