கேரட் ஜவ்வரிசி பாயசம்..

by Editor News

தேவையான பொருட்கள் :

கேரட் – 200 கிராம்

காய்ச்சிய பால் – 1 கப்

சர்க்கரை – 1/2 கப்

ஜவ்வரிசி – 2 டேபிள் ஸ்பூன்

நெய் – 2 டேபிள் ஸ்பூன்

முந்திரி – தேவைக்கேற்ப

உலர் திராட்சை – தேவைக்கேற்ப

ஏலக்காய் தூள் – தேவைக்கேற்ப

குங்குமப்பூ – ஒரு பின்ச்

தண்ணீர்

செய்முறை :

முதலில் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடானதும் நெய் ஊற்றி அதில் முந்திரி மற்றும் உலர் திராட்சை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பின் தீயை குறைத்து அதே நெய்யில் ஜவ்வரிசி சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளுங்கள்.

ஜவ்வரிசி அனைத்தும் நன்றாக பொரிந்தவுடன் அதில் துருவி வைத்துள்ள கேரட் சேர்த்து நன்றாக கலந்து விட்டுக்கொள்ளவும்.

கேரட்டின் நிறம் மாறியவுடன் அதில் தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.

கேரட் மற்றும் ஜவ்வரிசியை நன்றாக வேக விடவும்.

இரண்டும் நன்றாக வெந்தவுடன் அதில் சர்க்கரை சேர்த்து அது கரையும் வரை கலந்து கொள்ளுங்கள்.

சர்க்கரை முழுவதும் கரைந்தவுடன் அதனுடன் தண்ணீர் சேர்க்காமல் காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.

பால் நன்றாக கொதித்ததும் அதில் ஒரு பின்ச் குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் நுணுக்கிய ஏலக்காய் பொடியயையும் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கொதிக்கவிடவும்.

பாயசம் நன்றாக திக்கான பதத்திற்கு வந்தவுடன் ஏற்கனவே வறுத்துவைத்துள்ள முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து இறக்கினால் சுவையான ‘கேரட் பாயசம்’ ரெடி.

Related Posts

Leave a Comment