தமிழ்நாடு மீனவர்களின் பாதுகாப்பு குறித்து இன்று பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியதை சபாநாயகர் ஏற்று கொள்ளவில்லை என்பதால் திமுக எம்பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார் இந்த நிலையில் இன்றுடன் பாராளுமன்ற கூட்டம் நிறைவடைய உள்ள நிலையில் இன்றைய கூட்டத்தில் தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தினர்
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை செலுத்த வேண்டும் என டி ஆர் பாலு பேசிய போது அவர் தொடர்ந்து பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்ததை கண்டித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் தமிழகத்தில் வெள்ள பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என திருச்சி சிவா எம் பி எம் நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால் இதுவும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.