129
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை (04) கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வின் காரணமாக கொழும்பு – கோட்டையிலிருந்து வெள்ளவத்தை வரையான கரையோர ரயில் மார்க்கத்தின் புகையிரத நிலையங்களில் ரயில் நிறுத்தப்பட மாட்டாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ளவுள்ள சதந்திர தின நிகழ்வின் பாதுகாப்பு நடவடிக்கைகாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தலைமைச் செயலக ரயில் நிலையம், கொள்ளுப்பிட்டி மற்றும் பம்பலப்பிட்டி ஆகிய இடங்களில் ரயில்கள் நிறுத்தப்படாது என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.