கடைசி நேரத்தில் சமையலில் பாக்கியாவிற்கு விழுந்த அடி…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கிலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வருகின்றது.

பாக்யாவை வேண்டாம் என்று விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்து தனியாக இருந்து வந்த நிலையில் தற்போது பாக்கியாவின் வீட்டிற்கே வந்துள்ளார்.

ராதிகா பாக்கியாவிற்கு ஆறுதலாக இருந்து வருகின்றார். ஆனாலும் பாக்கியா அடுத்தடுத்து பிரச்சினையை சந்தித்து வரும் நிலையில், தனது தொழிலில் அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுள்ளார்.

தற்போது பாக்கியாவிற்கு புதிய ஆர்டர் ஒன்றும் கிடைத்துள்ளது. குறித்த ஆர்டரை செய்து முடித்த தருணத்தில் வேலையாட்கள் பாயாசத்தை கீழே கொட்டி விடுகின்றனர்.

வண்டி கிளம்ப இருக்கும் சில நொடிகளில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், பாக்கியா இதற்கு என்ன செய்யப் போகின்றார் என்பது தெரியாமல் நிற்கும்படியாக ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

Related Posts

Leave a Comment