கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டதால் ஏற்பட்ட பதற்ற நிலையை அடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் அண்மையில் 108 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நிறுவப்பட்டு அதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டது.
எனினும் தேசியக் கொடியை ஏற்றுவதாகக் கூறி அனுமன் கொடியை ஏற்றியதாகக் குற்றம் சுமத்திய அப்பகுதி மக்கள் உடனடியாக அக்கொடியை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அனுமன் கொடியை அகற்றுவதற்காக அதிகாரிகள் சென்றுள்ள நிலையில் அதற்கு எதிராக பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம், பஜ்ரங் தளம் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட சிலரால் காங்கிரஸ் கட்சியின் பனர்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து அங்கு ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் குறித்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.