தேவையான பொருள்கள் :
நாட்டுக்கோழி – 1 கிலோ,
சின்ன வெங்காயம் – 300 கிராம்,
நல்லெண்ணெய் – 200 மில்லி ,
காய்ந்த மிளகாய் – 20
மஞ்சள் பொடி – அரை ஸ்பூன்,
இஞ்சி பூண்டு பேஸ்ட் – – 2 ஸ்பூன்,
கறிவேப்பிலை – 2 கொத்து,
உப்பு – தேவையான அளவு,
செய்முறை :
மண் சட்டியில் 100 மில்லி அளவு நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் அதில் தோலுரித்த சின்ன வெங்காயத்தை முழுசாக அதில் சேர்க்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வதங்க வேண்டும். வெங்காயம் வதங்கிய பிறகு, அதில் கறிவேப்பிலை சேர்க்க வேண்டும்.
கறிவேப்பிலை வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு பேஸ்ட்டை போட்டு ஒரு நிமிடம் மட்டும் வதக்குங்கள்.
அடுத்ததாக சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் கோழியை அதில் சேர்க்க வேண்டும்.
கறியை 10 நிமிடங்கள் நன்கு வதக்கி விட்டு, அதன் பிறகு காய்ந்த மிளகாயை கிள்ளி. அதில் உள்ள விதையை நீக்கி விட்டு, சேர்க்க வேண்டும்.
அடுத்ததாக அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து விடுங்கள்.
ஒரு கிலோ கறிக்கு 2 லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
நாட்டுக்கோழி வேக நீண்ட நேரம் பிடிக்கும். பிராய்லர் சிக்கனில் செய்வதென்றால் 500-600 மில்லி தண்ணீர் போதும்.
கோழிக்கறி நன்கு வெந்த பின் (45 நிமிஷம்) அதில் ஒரு கொத்து பச்சை கறிவேப்பிலையை உருவி சேர்த்து, மீதமுள்ள நல்லெண்ணெயை அதில் ஊற்றி மூடி வைத்துவிடுங்கள். அடுப்பை அணைத்து விடலாம்.
சுவையான நாட்டுக்கோழி வறுவல் ரெடி.