நோட்டோ அமைப்பில் இணையும் சுவீடன் : ஒப்புதல் வழங்கியது துருக்கி

by Editor News

நேட்டோ அமைப்பில் சுவீடன் நாட்டுக்கு அங்கத்துவதை வழங்க துருக்கி உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.

ஹங்கேரியும் ஒப்புதல் வழங்கினால், நோர்டிக் நாடான சுவீடன் நேட்டோ அமைப்பின் அங்கத்துவ நாடாக மாறிவிடும்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நிலுவையில் இருந்த யோசனைக்கு துருக்கி நாடாளுமன்றம் கடந்த வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை அடுத்து பின்லாந்து மற்றும் சுவீடன் நேட்டோ அமைப்பில் உறுப்புரிமை பெற விண்ணப்பித்திருந்தன.

நேட்டோ உறுப்பு நாடான துருக்கி ஆரம்பத்தில் பின்லாந்தின் விண்ணப்பத்திற்கு மட்டுமே ஒப்புக்கொண்டது. இந்த நிலையில் சுவீடனின் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், நேட்டோவில் ஸ்வீடன் இணைவது குறித்து பெப்ரவரி மாத இறுதியில் ஹங்கேரி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment