சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. தங்கம் விலை நேற்று முன் தினம் உயர்ந்த நிலையில், நேற்று குறைந்து. சென்னையில் நேற்று முன் தினம் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 46,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 5,835 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் விலை 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரண தங்கம் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் ஒரு கிராம் 5,830 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையும் எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.77.50க்கும், ஒரு கிலோ ரூ.77,500க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.