கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..

by Editor News

எளிதாகவும், குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய பழங்களில் ஒன்றுதான் கொய்யாப்பழம். குறைந்த கலோரி கண்ட கொய்யாப்பழம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல்வேறு வகையான ஊட்டச்சத்துகளை கொடுக்கிறது. குறிப்பாக உடல் எடையை குறைப்பதற்கு பயன்படுகிறது.

கொய்யாப்பழத்தில் நார்சத்து நிறைந்துள்ளதால் செரிமானத்தை தாமதப்படுத்தி பசி உணர்வை தாமதமாக்கும் எனவே தேவையற்ற உணவுகளை அதிகம் சாப்பிட முடியாது. குறைந்த கலோரி கொண்ட கொய்யா பழத்தில் அதிக ஆற்றல் நிறைந்துள்ளது.

அதேபோல் கொய்யாப்பழத்தில் விட்டமின்கள் மற்றும் மினரல்களும் நிறைந்திருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது. எனவே உடல் எடை குறைக்க விரும்புவார்கள் கொய்யாப்பழத்தை தினமும் சாப்பிடலாம்.

Related Posts

Leave a Comment