பிரபல ரிவியில் கோலகமாக ஆரம்பித்த பிக் பாஸ் சீசன் 7 கடந்த சில வாரத்திற்கு முன்பு பிரம்மாண்டமாக முடிந்தது. இதில் அர்ச்சனா டைட்டில் வின்னரான நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு 16 லட்சம் பணத்துடன் வெளிவந்த பூர்ணிமா கண்ணீருடன் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
மாயா மற்றும் பூர்ணிமா இடையே ஏற்பட்ட நட்பு வெளியே ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. தொடர்ந்து விஷ்ணு விஜய்க்கும் இவருக்கும் இடையே காதலும் மலர்ந்தது.
ஆனால் இந்த காதல் குறித்து வெளியே தற்போது எந்தவொரு பேச்சையும் இருவரும் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டிலிருந்து 16 லட்சம் பணத்தை எடுத்து வெளியே செல்லும் போது ஒட்டுமொத்த போட்டியாளர்கள் முன்பும் சாஷ்டாங்கமாய் விழுந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றார்.
டைட்டிலை வென்ற அர்ச்சனாவிற்கு சினிமா வாய்ப்பு ஒன்றும் கிடைக்காத நிலையில், மக்களின் வெறுப்பை சம்பாதித்த பூர்ணிமாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.