காஸாவின் 2ஆவது மிகப் பெரிய நகரமான கான் யூனிஸை இஸ்ரேல் இராணுவம் சுற்றிவளைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்” கான் யூனிஸ் நகரை இஸ்ரேப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். காஸாவுக்குள் மேலும் முன்னேறிச் செல்வதற்கான இராணுவ நடவடியின் ஒரு பகுதியாக, இந்நகரம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த குறித்த பகுதியில் ஹமாஸ் குழுவினருக்கும், இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடுமையாக மோதல் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கடந்த 22 ஆம் திகதி மாத்திரம் காஸாவில் இடம்பெற்ற தரைவழித் தாக்குதலின்போது 24 இஸ்ரேல் இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் எனவும், இதுவரை காலத்தில் 200 மேற்பட்ட இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இதேவேளை இஸ்ரேல்- ஹமாஸுக்கு இடையிலான போரில் இதுவரை 25,490 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.