68
குளிர் காலங்களில் ஏற்படும் வறட்சி இருமலை போக்க வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே குணப்படுத்த முடியும். அதன்படி ஒரு கரண்டி தேனை எடுத்து வெதுவெதுப்பான நீர், எலுமிச்சை சாறு இஞ்சியுடன் கலந்து குடித்தால் இருமல் குணமாகும்.
இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரஸ் மற்றும் எக்ஸ்பெக்டோரண்ட் பண்புகளை கொண்டுள்ளது. இது சுவாசப் பாதை அடைப்புகளை அழித்து இருமலை குணப்படுத்துகிறது.
அதேபோல் மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு, கிருமி நாசினிகள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்துள்ளது. இவை தொற்று மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.
மேலும் இருமலை போக்க உப்பும் நீரில் வாய் கொப்பளிப்பதால் சுவாச பாதையில் உள்ள சளியை அகற்றி தொண்டை எரிச்சல் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.