மேஷம்:
உங்கள் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்கக்கூடிய காதல் அனுபவங்களை உங்கள் ஆழ்மனம் தேடிக் கொண்டிருக்கும். பணியிடத்தில் பல்முனை வேலைகளை நீங்கள் செய்து முடிப்பீர்கள். சத்தான உணவுகளை தவிர்க்க வேண்டாம் மற்றும் யோகா அல்லது தியானம் மூலம் மனம் அமைதி பெறும். பயணங்கள் குதூகலமாக அமையும்.
ரிஷபம்:
உங்கள் காதல் வாழ்வில் உளப்பூர்வமான பந்தம் ஏற்படும். பணியிடத்தில் பொறுமையை கடைப்பிடித்தால் அனைத்து சாதனைகளையும் செய்யலாம். சீரான உணவு பழக்கம் மற்றும் தினசரி உணவு பயிற்சி அவசியம். இயற்கை சார்ந்த இடங்களுக்கு பயணம் செய்யலாம். தோட்ட பராமரிப்பு அல்லது பெயிண்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ளுங்கள்.
மிதுனம்:
காதல் வாய்ப்புகளுக்கு திறந்த மனதுடன் இருக்கவும். கூட்டு முயற்சிகளின் அடிப்படையில் பணிகளில் வெற்றி பெறுவீர்கள். உடல் நலனை தக்க வைக்க சீரான உணவு பழக்கம் அவசியம். வாசித்தல் மனதுக்கு அமைதியை தரும். அருகாமையில் உள்ள புதிய இடங்களுக்கு பயணம் செய்யலாம்.
கடகம்:
உளப்பூர்வமான பந்தங்கள் மற்றும் புத்தம் புதிய தொடர்புகளின் மூலமாக உங்கள் காதல் வாழ்க்கை புத்துணர்ச்சியாக இருக்கும். உங்கள் வேலை சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்ள முன்னுரிமை கொடுக்கவும். அன்புக்குரிய நபர்களுடன் இணைந்து சமையல் பணிகளை செய்யலாம். கடலோரப் பகுதிகளுக்கு பயணம் செய்ய விரும்புவீர்கள்.
சிம்மம்:
உங்கள் பணி சார்ந்த வாழ்வில் மிக முக்கியமான சாதனைகளை மேற்கொள்வீர்கள். ஆரோக்கியமான வாழ்வியல் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கவும். நடனம் அல்லது பெயிண்டிங் போன்றவை மனதுக்கு புத்துணர்ச்சி தரும். பெருநகரப் பகுதிகளுக்கு பயணம் செய்யலாம் அல்லது குழு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
கன்னி:
உங்கள் காதல் வாழ்வில் ஸ்திரத்தன்மை ஏற்பட இருக்கிறது. பணிகளில் மிக ஆழமாக கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். மன அழுத்தத்தை குறைக்கின்ற பயிற்சிகளில் ஈடுபடவும். இயற்கையை மையப்படுத்தும் இடங்களில் நடை பயிற்சி அல்லது தியானம் செய்வது மன அமைதியை தரும். புதுமையான இடங்களுக்கு பயணம் செய்யலாம்.
துலாம்:
காதலில் சமநிலையை ஏற்படுத்துவது தான் உங்கள் இலக்காக இருக்க வேண்டும். பணியிடத்தில் கூட்டு முயற்சி திட்டங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். தியானம் செய்ய முன்னுரிமை கொடுக்கவும். இன்று சமூக நிகழ்வுகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும்.
விருச்சிகம்:
காதல் வாழ்வில் உளப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். மன உறுதி மற்றும் ஈடுபாடு ஆகிவிட்டால் உங்கள் பணி வாழ்க்கையை மாற்றி அமைக்கலாம். நேரத்திற்கு சாப்பிடவும். புத்தகங்களை வாசித்தால் மனம் தெளிவு அடையும். இயற்கை சார்ந்த இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
தனுசு:
காதலை ஏற்றுக் கொள்ளுங்கள் மற்றும் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பணியிடத்தில் உங்கள் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலனை தக்க வைக்க உடற்பயிற்சிகள் அவசியம். மலையேற்றம் மன அமைதியை தரும். அருகாமையில் உள்ள குதூகலமான பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம்.
மகரம்:
காதல் அடித்தளத்தை திடமானதாக அமைக்க நீங்கள் அக்கறை செலுத்த வேண்டும். ஒழுங்கு மற்றும் ஈடுபாடு ஆகியவற்றுடன் பணியாற்றினால் நல்ல பலன் கிடைக்கும். தோட்ட பராமரிப்பு பணிகளை செய்யலாம். வரலாற்று முக்கியத்துவம் சார்ந்த பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம்.
கும்பம்:
உங்கள் காதல் வாழ்க்கை தனித்துவமானது மற்றும் பல அனுபவங்களை பெற்று இருப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் புதிதாக சிந்தனைகளுக்கான அங்கீகாரம் கிடைக்கும். சீரான உணவுப் பழக்கம் அவசியம். அதிகம் அறியப்படாத இடங்களுக்கு சுற்றுலா செல்லலாம்.
மீனம்:
மிக ஆழமான பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். விறுவிறுப்பான பணிகளுக்கு மத்தியில் உங்கள் உடலுக்கு தேவையான ஓய்வை எடுத்துக் கொள்ளுங்கள். இசையை ரசிப்பது அல்லது பெயிண்டிங் செய்வது மன அமைதியை தரும். ஆன்மீக பயணங்களை செய்யலாம் அல்லது நீர்நிலைகளை நோக்கிய இடங்களுக்கு செல்லலாம்.