வரும் 15,16,27 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் அறுவடைப் பண்டிகை ஆகும். பொங்கல் பண்டிகையானது 3 நாட்கள் கொண்டாடப்படும். இதன் காரணமாக மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பொதுமக்கள் வசதிக்காக வரும் 15,16,27 ஆம் தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையின்படி, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 5 முதல் மதியம் 12 மற்றும் இரவு 8-10 மணி வரை 10 நிமிட இடைவெளியிலும், மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியிலும், இரவு 10-11 மணி வரை 15 நிமிட இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படும்.