பழங்காலத்தில் இருந்தே பெண்கள் மற்றும் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். என்ன தான் உடல் முழுவதும் தங்கத்தில் அழகு படுத்தினாலும் காலில் மட்டும் வெள்ளியை மட்டும் பயன்படுத்துவர். இதற்கு காரணம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
காலில் தங்கம் அணிவது உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கும். ஆனால் காலில் வெள்ளி அணிவது நமது உடலுக்கு பல்வேறு மருத்துவ குணங்கள் கிடைக்க செய்கிறது. மேலும் வெள்ளி கொலுசு காலில் அணிவதால் உடல் குளிர்ச்சி அடைவதுடன் உடல் வெப்பநிலையை கட்டுக்குள் வைத்திருக்க உதவி புரிகிறது.
பெண்கள் வெள்ளி கொலுசு அணிவதால் எலும்புகள் வலுவடையும். வெள்ளி கொலுசு கால்களை தொடும் பொழுது இந்த உலோக உறுப்பு தோலில் ஊடுருவி எலும்புகளை வலுப்படுத்துகிறது. பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் பிரச்சனை,குழந்தையின்மை, கால் வலி போன்ற பிரச்சினைகளுக்கு காலில் வெள்ளி கொலுசு அணிவது சிறந்த தீர்வாக பார்க்கப்படுகிறது.