தூத்துக்குடி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை – மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு

by Editor News

தாமிரபரணி ஆற்றில் குளிக்கவும் கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதாலும், இன்றும் (09.01.2024) நாளையும் (10.01.2024) கனமழை எச்சரிக்கை உள்ளதாலும், திருநெல்வேலி மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் வரும் என எதிர்பார்க்கப்படுவதாலும், தூத்துக்குடிமாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், உப்பாத்து ஓடை கரையோர பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment