127
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவில் உள்ள வெளிநாட்டவரைப் பயன்படுத்தி உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக சீன அரசு குற்றம் சுமத்தியுள்ளது.
சீன அரசின் பிரதான உளவுப் பிரிவினரே இதனைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சீன உளவுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ”சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பிரித்தானிய உளவு அமைப்பு செயற்பட்டுள்ளது.
அத்துடன் பிரித்தானிய உளவுச் சேவையானது, தாம் உளவு நடவடிக்கைக்கு பயன்படுத்திய நபருக்கு விசேட புலனாய்வுப் பயிற்சிகள் அளித்துள்ளதோடு, அவரது உளவு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பல கருவிகளையும் வழங்கியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.