222
பிக் பாஸ் எலிமினேஷன்
பிக் பாஸ் 7 நிகழ்ச்சி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பணப்பெட்டியுடன் பூர்ணிமா வெளியேறிய நிலையில், மீதம் 7 போட்டியாளர்கள் தற்போது வீட்டிற்குள் இருக்கிறார்கள்.
இதில், மாயா அல்லது விஜய் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என பிரைவேட் வோட்டிங் போல் முடிவுகளில் தெரியவந்தது.
கடுப்பான ரசிகர்கள்
ஆனால், தற்போது விசித்ரா தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறிவிட்டார் என தெரியவந்துள்ளது. இந்த எலிமினேஷன் ரசிகர்கள் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை முட்டாள் என நினைக்கிறார்களா, இது நியாயமே இல்லை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
வேறொரு முக்கியமான போட்டியாளரை காப்பாற்றுவதற்காக தான் இப்படி செய்கிறார்களா என்றும் ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்கிறர்கள்.