தேவையான பொருட்கள் :
புளி – தேவையான அளவு
பூண்டு – 5 பற்கள்
தக்காளி – 2
சீரகம் – 1/4 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3
மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்
சீரகத்தூள் – 3/4 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி இலைகள் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் புளியை 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து அதன் கரைசலை எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
பிறகு அந்த புளி கரைசளுடன் எடுத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நசுக்கி கரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது கடாயை அடுப்பில் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம் வெந்தயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
பிறகு நாம் எடுத்து வைத்துள்ள பத்து பல் பூண்டை இடித்து கடாயில் சேர்த்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து பூண்டின் பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
தற்போது கரைத்து வைத்துள்ள புளி தக்காளி கரைசலை கடாயில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
அந்த புளிக்கரைசல் நன்றாக கொதித்தவுடன் அதில் எடுத்து வைத்துள்ள மிளகுத்தூள், சீரகத்தூள் மறுபடியும் சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் காரசாரமான தக்காளி மிளகு ரசம் தயார்.