சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம்.. ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் குவிந்தனர்…

by Editor News

மண்டல பூஜைக்குப் பிறகு டிசம்பர் 30-ஆம் தேதி மகரவிளக்கு உற்சவத்துக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி புதன் கிழமை மாலை 5 மணி வரை 3 லட்சத்தி 83,268 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜனவரி 1ஆம் தேதி அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் சன்னிதானத்தை வந்தடைந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி ஒன்றாம் தேதி 1,0,1789 பேர் தரிசனம் செய்தனர். ஜனவரி 2ஆம் தேதி 1,0,372 பேர் வந்துள்ளனர். ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை 59,143 பேர் மலை ஏறி சாமி தரிசனம் செய்தனர். புள்ளிவிவரங்களின்படி, மண்டல காலம் தொடங்கி ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5:00 மணி வரை சன்னிதானத்திற்கு வந்த மொத்த பக்தற்களின் எண்ணிக்கை 33, 71,695 பேர் ஆகும்.

இதில் ஜனவரி 2 ல் 19, 912 பேர் கரிமலை வழியாகவும், புல்லுமேடு வழியாக 3291 பேரும் சன்னிதானத்தை அடைந்தனர். இதே நாளில் ஆன்லைன் புக்கிங் மூலம் 80000 பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 8486 பேரும் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்தனர். ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை 1890 பேர் புல்லுமேடு வழியாக சன்னிதானம் அடைந்தனர்.

கூட்டம் அதிகரிப்பு காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு தேவசம் போர்டு மற்றும் பிற துறைகள் குடிநீர், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் மும்முரமாக கவனம் செலுத்தி உள்ளன.

வரும் நாட்களில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரபடுதவும் தேவசம் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்றது.

Related Posts

Leave a Comment