தேவையான பொருட்கள் :
பனீர் – 1 கப்
இட்லி மாவு – 1 கப்
வெங்காயம் – 1
தக்காளி – 1
புதினா – கையளவு
மிளகாய் தூள் – 1 tsp
தனியா தூள் – 1 tsp
மஞ்சள் தூள் – 1/4 tsp
கரம் மசாலா தூள் – 1/2 tsp
தேங்காய் துருவல் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 2
சோம்பு – 1 tsp
பூண்டு – 6 பல்
இஞ்சி – 1 துண்டு
கசகசா – 1 tsp
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தே.அ
தாளிக்க :
எண்ணெய் – 2 tsp
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
சோம்பு – 1
செய்முறை :
முதலில் தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு, கசகசா , இஞ்சி பூண்டு சேர்த்து மைய அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி பட்டை , கிராம்பு , ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.
பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து சுருங்க வதக்கவும்.
இப்போது அதில் புதினா சேர்த்து வதக்கவும். அடுத்து பனீர் சேர்த்து பிரட்டுங்கள்.
இப்போது உப்பு சேர்த்து, அரைத்த விழுது சேர்த்து கலந்துவிட்டு தொக்கு போல் சுருங்கி வரும் வரை வதக்கிவிடவும். இறுதியாக கறிவேப்பிலை தூவி பிரட்டவும். அவ்வளவுதான் பனீர் மசாலா ரெடி.
இப்போது தோசைக்கல் வைத்து தோசை சுட்டு அதன் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் பனீர் மசாலா வைத்து பரப்பி விடுங்கள்.
பின் தட்டு போட்டு மூடி வையுங்கள். தோசை மொறுவலாக வந்ததும் ஒரு பக்கமாக மடித்து எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் பனீர் தோசை தயார்.